தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் ராஜகோபாலின் குற்றப்பத்திரிக்கையில் இருப்பது என்ன? - CHARGE SHEET AGANIST PSBB TEACHER RAJAGOPAL

பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலிடம் சுமார் 250-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகவும், நேரடியாகவும் பெறப்பட்ட வாக்குமூலத்தின் மூலம் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர் ராஜகோபாலின் குற்றப்பத்திரிக்கை
ஆசிரியர் ராஜகோபாலின் குற்றப்பத்திரிக்கை

By

Published : Oct 3, 2021, 8:37 PM IST

சென்னை: கே.கே.நகர் பத்மசேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் கடந்த மே மாதம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இதில் ராஜகோபாலனிடம் நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்டு, காவல் துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தினர். குறிப்பாக, ஏழு மாணவிகள் அளித்தப் புகாரின் அடிப்படையில், ஒவ்வொரு புகாருக்கும் 50 கேள்விகளைத் தயாரித்து அதற்கு பதில் அளிக்கும்படி ராஜகோபாலனிடம் காவலர்கள் விசாரணை நடத்தினர்.

ராஜகோபாலின் சேட்டைகள்

சுமார் 250 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதில் அளிக்கும்படி காவலர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, பள்ளி நிர்வாகத்திற்கு இந்த விவகாரம் தெரிந்தே நடந்ததா?... மாணவர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் ஆபாச வீடியோ பதிவிட்டது ஏன்?... அரைகுறை ஆடையோடு ஆன்லைன் வகுப்பு ஏன் நடத்துனீர்கள்?... மாணவிகளுக்கு சினிமா ஆசைகாட்டி என்ன மாதிரியான மோசடிகளில் ஈடுபட்டீர்கள்?... எந்தெந்த ஆசிரியருடன் சேர்ந்து மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தீர்கள்?... எனக் காவலர்கள் சரமாரி கேள்விகள் கேட்டு கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணையின்போது ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பிற்கு வீடியோவில் வரும் மாணவிகளை சூம் (zoom) செய்து, ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து ரசித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

என்ன தண்டனை கிடைக்கும்

இந்த விசாரணையில் கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் ராஜகோபால் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த விதத்தையும், பதிவு செய்து ஒவ்வொரு குற்றப்பத்திரிக்கையாகத் தாக்கல் செய்ய இருப்பதாக காவல் துறையினர் முன்னதாகத் தெரிவித்திருந்தனர். மேலும், இவ்வழக்கில் 17 நபர்களிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று (அக்.03) அசோக் நகர் மகளிர் காவல் துறையினர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

இந்த குற்றப்பத்திரிக்கையின் மூலம் நீதிமன்றம் ராஜகோபாலுக்கு அதிகப்படியான தண்டனை வழங்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பத்ம சேஷாத்ரி விவகாரம்: தனிப்பட்ட பள்ளி போல் நடத்தும் ஒய்ஜிபி குடும்பம் - ஹென்றி டிபேன்!

ABOUT THE AUTHOR

...view details