சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் சென்னை மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனையடுத்து கடந்த 2 நாட்களாக சென்னையிலிருந்து புறப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை மாநகரம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், இன்றும் (டிசம்பர் 6) சென்னையிலிருந்து புறப்படும் சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 6.10 மணிக்கு புறப்படுவதாக இருந்த ரயில் எண்.12675 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் கோவை எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது
- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 7.10 மணிக்கு புறப்படுவதாக இருந்த ரயில் எண்.12243 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- கோவையிலிருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்படுவதாக இருந்த ரயில் எண்.12244 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- கோவையிலிருந்து மதியம் 3.15 மணிக்கு புறப்படுவதாக இருந்த ரயில் எண்.12676 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று மதியம் 3.20 மணிக்கு புறப்படுவதாக இருந்த ரயில் எண்.12695 சென்னை சென்ட்ரல் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று மதியம் 4.20 மணிக்கு புறப்படுவதாக இருந்த ரயில் எண். 12685 சென்னை சென்ட்ரல் மங்களுரூ சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- இன்று (டிச.6) காலை 6.20 மணிக்கு கோவையிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் கோவை - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12680) காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்.
- இன்று (டிச.6) மதியம் 2.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவை வரை இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12679) காட்பாடியிலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.