தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்? - exam

மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முறையில் மாற்றம்

By

Published : May 10, 2019, 12:53 PM IST

Updated : May 10, 2019, 5:05 PM IST

2019-05-10 12:40:20

சென்னை: 10, 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முறையில் பள்ளிக் கல்வித் துறை மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அரசின் ஒப்புதல் பெற்றவுடன் வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது.

ஒன்பது, பத்தாம் வகுப்பிற்கான மொழித் தேர்வு தாள்களை ஒன்றாக இணைத்தல், 11, 12ஆம் வகுப்பு பாடமுறை பிரிவுகள் சீரமைப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறையில் உள்ள இயக்குநர்கள், இணை இயக்குநர்களின் கூட்டம் மே 2ஆம் தேதி நடைபெற்றது.


அந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், அரசு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தரா தேவி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அந்தக் கூட்டத்தில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்களை ஒருங்கிணைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 11,12ஆம் வகுப்பில் பல்வேறு பிரிவுகள் உள்ளதால் மாணவர்கள் அவற்றில் தேர்வு எழுதி வருகின்றனர். எனவே, அதனை மாற்றி 500 மதிப்பெண்களுக்கு ஐந்து பாடத்தில் மட்டும் தேர்வு எழுதும் வகையில் மாற்றி அமைக்கப்படுகிறது. 

பகுதி ஒன்றில் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது பிற மொழிகள், பகுதி இரண்டில் பொது பிரிவிற்கான ஏதாவது மூன்று பாடங்கள், பகுதி மூன்று தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது பிற மொழிகள் அல்லது பகுதி இரண்டில் உள்ள ஏதாவது ஒரு பாடத்தினை தேர்வு செய்யலாம். தொழில்கல்வி பாடத்திட்டத்தினை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள முறையை தொடர்ந்து பின்பற்றலாம். 

இதேுபோன்று,  ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவரவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தற்பொழுது தமிழ், ஆங்கிலம் மொழிப்பாடத்தில் தாள் 1,  தாள் 2 என நடத்தப்பட்டு வருகிறது.

அதனை கல்வியாளர்களின் கருத்து கேட்ட பின்னர், ஒன்பது,  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மொழி பாடங்களில் இரண்டு தாள்களாக உள்ள தேர்வினை ஒரே தாள் தேர்வாக மாற்றலாம் என ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்,

  • பகுதி 1 (கட்டாயம்) தமிழ்,
  • பகுதி 2 (கட்டாயம்) ஆங்கிலம்,
  • பகுதி 3 கணக்கு அறிவியல், சமூக அறிவியல்
  • பகுதி 4 (விருப்பப் பாடம்) மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் தவிர தங்களின் தாய்மொழியை விருப்பப் பாடமாக தேர்வு செய்து எழுதலாம்.

இந்தக் கூட்டத்தின் முடிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டு அரசின் அனுமதிபெற்ற உடன் வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என பள்ளிக் கல்வித் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

Last Updated : May 10, 2019, 5:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details