தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 21, 2021, 8:45 AM IST

ETV Bharat / state

சென்னை புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை: சென்னை புறநகர் மின் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்
சென்னை புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு காரணமாக சென்னை ரயில்வே கோட்டம், புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்களை செய்துள்ளது.

அதன் விவரம் கீழ்வருமாறு:

வார நாள்கள் ( திங்கள் முதல் சனி)

  1. சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் - 150 சேவைகள்
  2. சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி/சூலூர்பேட்டை மார்க்கம் - 64 சேவைகள்
  3. சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கம் - 68 சேவைகள்
  4. சென்னை கடற்கரை - தாம்பரம்/செங்கல்பட்டு/திருமால்பூர் மார்க்கம் - 152 சேவைகள்

என மொத்தம் 434 புறநகர் ரயில் சேவைகள் வார நாள்களில் இயக்கப்படும்.

சென்னை புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்

ஞாயிற்றுக்கிழமைகளில்

  1. சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் - 32 சேவைகள்
  2. சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை மார்க்கம் - 24 சேவைகள்
  3. சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கம் - 12 சேவைகள்
  4. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கம் - 18 சேவைகள்

என மொத்தம் 86 புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.

குறிப்பு: இரவு 10 மணிமுதல் மறுநாள் காலை 4 மணிவரை எந்த ஒரு ரயில் முனையத்திலிருந்தும் புறநகர் ரயில் புறப்பாடு இருக்காது.

இந்தத் திருத்தப்பட்ட புறநகர் ரயில் சேவைகளுக்கான புதிய கால அட்டவணை நாளைமுதல் (ஏப்ரல் 22) அமல்படுத்தப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details