சென்னை:ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்று (ஜூலை 14) நிலவை ஆராய, ரூ.615 கோடி மதிப்பிலான சந்திரயான் 3 விண்கலம் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது வெற்றிகரமாகப் புவி நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாகவும், அதன் இயக்கம் திருப்திகரமானதாக இருப்பதாகவும் இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதற்கான பணியில் அயராது பாடுபட்ட (ISRO) இஸ்ரோவின் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு நாட்டில் அனைத்து பகுதிகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது நாடு முழுதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை அமெரிக்கா, சீனா மற்றும் சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் நிலவிற்கு வெற்றிகரமாக விண்கலங்களைத் தரையிறக்கியுள்ளது. அந்த பட்டியலில் தற்போது இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. ஜூலை 31ஆம் தேதி வரை பூமியை 10 முறை சுற்றும் சந்திரயான் 3 விண்கலம், ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து, நிலவின் தென் துருவ பகுதியில் சுமார் 5 நாட்கள் எந்த கிரகத்தையும் ஒட்டாத பகுதியில் பயணம் செய்யும் சந்திரயான் 3, நேரடியாக நிலவில் இறங்காமல், நிலவையும் சுற்றிவரும் எனவும் . பின்னர் ரோவர் வாகனம் திறந்துவிடப்பட்டு நிலவில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.