தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அதிகாலையில் சந்திரயான்-2 நிலவில் தரையிறங்கும்" - இஸ்ரோ தலைவர் சிவன்

சென்னை: செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை நிலவில் சந்திரயான்-2 தரையிறங்கும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

"செப்டம்பர் 7ந் தேதி அதிகாலை நிலவில் சந்திராயன்-2 தரையிறங்கும்" - இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

By

Published : Aug 22, 2019, 4:13 PM IST

Updated : Aug 23, 2019, 9:27 AM IST


இஸ்ரோ தலைவர் சிவன் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமியிடமிருந்து அப்துல்கலாம் விருதை பெற்றுவிட்டு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ”நிலவை சுற்றி நீள்வட்டப் பாதையில் சென்றுகொண்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு நிலவில் தரையிறங்கும் முயற்சியை தொடங்கி 1.55 மணிக்கு தரையிறங்கும். இந்த முக்கிய நிகழ்வை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தரையிறங்கும்போது 1.6 கி.மீ வேகத்தில் செல்லும் விண்கலத்தின் வேகத்தை முழுமையாக குறைக்க வேண்டும். இந்த சவாலான பணியை செய்வதற்கு விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
இஸ்ரோவில் ஆண்-பெண் என்ற வித்தியாசம் கிடையாது. யார் திறமையானவர்களோ அவர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும். சந்திரயான்-2 திட்டத்தில் பெண்களுக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. சந்திரயான்-2 திட்டத்திற்கு பிறகு பல திட்டங்களை செயல்படுத்த இருக்கும் திட்டங்களில் பெண்கள் தலைமை ஏற்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், சந்திரயான்-2 நிலவில் தரையிறங்கும்போது இஸ்ரோவிற்கு பிரதமரை அழைத்துள்ளோம். ஆனால் அவர் வருவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்றார்.
Last Updated : Aug 23, 2019, 9:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details