தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chances to heavy rains in three districts of southern Tamil Nadu
Chances to heavy rains in three districts of southern Tamil Nadu

By

Published : Apr 13, 2021, 12:53 PM IST

சென்னை: ”தெற்கு கேரளம் முதல் தெற்கு கொங்கன் வரை (0.9 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று (ஏப். 13) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும். தென் தமிழ்நாடு, வட, உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்துடன்கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்துடன்கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை” ” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவ விருதுநகர் 6 செ.மீ, வேடசந்தூர் 5செ.மீ, குன்னூர் , குடவாசல் , கயத்தாறு பகுதிகளில் தலா 4செ.மீ, பாடாலூர், கோவிலான்குளம், மணல்மேடு, ஸ்ரீமுஷ்ணம், பரூர், மீமிசல், அரவக்குறிச்சி பகுதிகளில் தலா 3செ.மீ, சூரழகோடு, பரமக்குடி, திருப்பத்தூர் பகுதிகளில் தலா 2 செ.மீ மழையும் பதிவாதியுள்ளது தெரிகிறது.

ABOUT THE AUTHOR

...view details