தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை... - chance to rain spell in six district

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain update in Tamilnadu  மழை எச்சரிக்கை  6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை  கனமழை  கனமழைக்கு வாய்ப்பு  சென்னை வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை  weather report  rain update  heavy rain  rain update  chance to rain spell in six district  rain spell in six district
மழை

By

Published : Jul 29, 2021, 11:13 AM IST

Updated : Jul 29, 2021, 1:09 PM IST

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 29) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கோயமுத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சேலம், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழை

31.07.2021 & 01.08.2021 வரை: கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

01.08.2021,02.08.2021 மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயமுத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களான புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

சென்னையில் மழை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்க கடல்

29.07.2021: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

29.07.2021 முதல் 30.07.2021 வரை: வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல்

29.07.2021 முதல் 02.08.2021வரை: தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா வெள்ளம்: உதவ முன்வந்த அமெரிக்கா

Last Updated : Jul 29, 2021, 1:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details