தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 28, 2022, 4:45 PM IST

ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

வெப்பசலனம் காரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: கேரளாவின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

உள் தமிழ்நாடு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் நாளை (மார்ச் 29) ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் நாளை மறுநாள் (மார்ச் 30) ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 31, ஏப்ரல் 1 ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் கடம்பூர் (தூத்துக்குடி), கயத்தாறு (தூத்துக்குடி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), கயத்தார் ARG (தூத்துக்குடி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) - தலா 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தாதது ஏன்? - ஜெயக்குமார் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details