தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு! - சென்னை புறநகர் வானிலை முன்னறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

By

Published : Dec 27, 2022, 2:23 PM IST

Updated : Dec 27, 2022, 2:42 PM IST

சென்னை: நேற்று (26.12.2022) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (27.12.2022) வலுவிழந்தது. மேலும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வரும் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 31 ஆம் தேதி அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 - 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 - 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

27.12.2022: கேரள கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: Tunisha Sharma: காதலனுக்கு பல பெண்களுடன் தொடர்பு.. துனிஷா மரணத்தின் முழு பின்னணி?

Last Updated : Dec 27, 2022, 2:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details