இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ’இன்று (மார்ச்4) முதல் நாளை (மார்ச்5) வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மார்ச் 6- 7 தேதிகளில் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேசான மழை
மார்ச் 8ஆம் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
இதையும் படிங்க:அரசியலுக்கு வாங்க சின்னம்மா... சசிகலா வீட்டின் முன் தொண்டர்கள் தர்ணா!