தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு, புதுவையில் பிப். 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - மிதமான மழை

சென்னை: தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மிதமான மழைக்கு வாய்ப்பு
மிதமான மழைக்கு வாய்ப்பு

By

Published : Feb 19, 2021, 1:54 PM IST

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

மழை விவரம்

19ஆம் தேதி: தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

20ஆம் தேதி: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மிதமான மழை
21 & 22ஆம் தேதி: தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், இதர பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
23ஆம் தேதி: தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதுமில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details