சென்னை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (மார்ச் 1) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (மார்ச் 2) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 3) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மார்ச் 4ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 5ஆம் தேதி பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, வாலிநோக்கம் மற்றும் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், தூத்துக்குடி ஆகியப் பகுதிகளில் தலா 3 செ.மீ., மழைப் பதிவாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர், திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி, நாலுமுக்கு, மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.