தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் - chennai weather forecast

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

By

Published : Nov 29, 2022, 1:38 PM IST

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "கேரள பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தென் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

முக்கியமாக கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மற்றும் திண்டுக்கல் போன்ற மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனையடுத்து நாளை (நவ.30) மற்றும் நாளை மறுநாள் (டிச.1) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் வரும் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதேநேரம் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும் கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மழை வேண்டி பொம்மைக்கு செருப்படி.. தூத்துக்குடி மக்களின் விநோத வழிபாடு!

ABOUT THE AUTHOR

...view details