தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று (ஜூலை 5) சேலம், தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

By

Published : Jul 5, 2021, 1:40 PM IST

உள்தமிழ்நாட்டில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று ( ஜூலை 5) சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஜூலை 6இல் வானிலை நிலவரம்:

வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 7இல் வானிலை நிலவரம்:

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 8 மற்றும் ஜூலை 9இல் வானிலை நிலவரம்:தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பிற்பகலில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):
குடவாசல் (திருவாரூர்) 12; பாலவிடுதி (கரூர்), சேலம் (சேலம்), அணைமடுவு அணை (சேலம்) தலா 10, பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), மங்களபுரம் (நாமக்கல்), மணல்மேடு (மயிலாடுதுறை), கள்ளந்திரி (மதுரை) தலா 9,

பெரம்பலூர், கயத்தாறு (தூத்துக்குடி), வானமாதேவி (கடலூர்) தலா 8, பாடாலூர் (பெரம்பலூர்), அரூர் (தர்மபுரி) , அரவக்குறிச்சி (கரூர்), முகையூர் (விழுப்புரம்), தலா 7; காங்கேயம் (திருப்பூர்), நாமக்கல், இளையாங்குடி (சிவகங்கை), ஆலங்காயம் (திருப்பத்தூர்) தலா 6,

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வங்க கடல் பகுதிகள்:
07.07.2021: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

08.07.2021, 09.07.2021: தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:
08.07.2021, 09.07.2021:தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

05.07.2021 முதல் 09.07.2021 வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இதையும் படிங்க: வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்காவில் சிறப்புப் பிரார்த்தனை

ABOUT THE AUTHOR

...view details