சென்னை:தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் மற்றும் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக, 6 மாவட்டங்களில் இன்று (ஜூன்.27) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்கள்
- திருவள்ளூர்
- ராணிப்பேட்டை
- காஞ்சிபுரம்
- திருவண்ணாமலை
- செங்கல்பட்டு
- விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட கடலோர மாவட்டம், உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஜூன் 28:கடலோர மாவட்டங்கள், சென்னை, புதுச்சேரி, காரைக்கால் ஆகியப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன்.29 முதல் 30 வரை: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது.
ஜூலை.1:நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோயம்புத்தூர், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை நிலவரம்