சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும், கீழடுக்கில் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும், தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும், கீழடுக்கில் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். நாளை(பிப்.21) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் (பிப்.22) தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்) கோத்தகிரி (நீலகிரி) 9, குன்னூர் (நீலகிரி) 7,சோத்துப்பாறை (தேனி) 6 , அலகாரி எஸ்டேட் (நீலகிரி) 5 ,தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), மே மாத்தூர் (கடலூர்) தலா 4, தழுத்தலை (பெரம்பலூர் ) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.