சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், 'தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய அசானி புயல் நாளை (மே 10) வடமேற்குத் திசையில் நகர்ந்து வட ஆந்திரா - ஒடிசா கடற்கரையினை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:மேலும் இன்று (மே 9) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்; நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது