தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! - மழை நிலவரம்

தமிழ்நாட்டில் இன்று தேனி, தென்காசி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

rain
மழை

By

Published : May 21, 2023, 4:47 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட இந்ததாண்டு அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும், வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று (மே 21) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.

மே 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:இன்றும், நாளையும் உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மழை அளவு: கடந்த 24 மணி நேரத்தில் பெரியகுளம் (தேனி) 7, பென்னாகரம் (தருமபுரி), திரூர் KVK AWS (திருவள்ளூர்) தலா 4, மாரண்டஹள்ளி (தருமபுரி) 3, இளையான்குடி (சிவகங்கை), காமாட்சிபுரம் (திண்டுக்கல்) தலா 2, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), சிவலோகம் (கன்னியாகுமரி), சோலையாறு (கோயம்புத்தூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), உதகமண்டலம் DRMS (நீலகிரி), வைகை அணை (தேனி), கிளென்மோர்கன் (நீலகிரி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 1 சென்டிமீட்டர் மழைப் பதிவாகி உள்ளதாக’’ வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details