சென்னை: வரும் 14ஆம் தேதி தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து, 16ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு - storm in the arabian sea
அரபிக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ள நிலையில், மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரபிக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு
இந்நிலையில், அரபிக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அனைவரும் வரும் 14ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: நள்ளிரவில் 45 ராக்கெட்களை ஏவிய ஹமாஸ்: இஸ்ரேலின் பதிலடியால் 20 பேர் உயிரிழப்பு!