தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன புகை பரிசோதனை கருவி விவகாரம்: வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் - petitioner imposed one lakh fine, MHC order

சென்னை: வாகன புகை பரிசோதனை கருவி குறித்து போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai
chennai

By

Published : Nov 26, 2020, 9:03 PM IST

தமிழ்நாட்டில் வாகன புகை பரிசோதனை கருவிகளைத் தயாரிக்கும் 12 நிறுவனங்கள் உள்ள நிலையில், புதுச்சேரியில் உள்ள நிறுவனத்தின் வாகன புகை பரிசோதனை கருவிகளை புகை பரிசோதனைக்கு பயன்படுத்தலாம் என மண்டல போக்குவரத்து அலுவலர்களுக்கு, தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டார்.

குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி, போக்குவரத்து ஆணையரின் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையர் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தவறான குற்றச்சாட்டுக்களுடன் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அந்த தொகையை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பேரிடர் நிவாரண நிதி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details