தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதயநிதி ஸ்டாலின் வெற்றி: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு - சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு

சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

MHC
MHC

By

Published : Jun 25, 2021, 10:23 PM IST

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் கசாலியை விட 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றியை எதிர்த்து, அத்தொகுதியின் தேசிய மக்கள் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில், தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அவரது வேட்புமனுவை ஏற்றுக் கொண்டதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், தொகுதியின் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை எனவும் அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விராலிமலை தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றி: திமுக வேட்பாளர் வழக்கு

ABOUT THE AUTHOR

...view details