தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா அபராத வசூலிப்பு அறிவிப்பாணை ரத்து செய்யக்கோரி மனு! - அறிவிப்பாணை ரத்து

சென்னை: கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத தனிநபரிடமும், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களிடமும் அபராதம் வசூலிக்கும் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Challenging corona norms implementation, remedy petition filed, MHC
Challenging corona norms implementation, remedy petition filed, MHC

By

Published : Oct 20, 2020, 12:32 PM IST

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த 77 வயதான ஆர். முத்துக்கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். மனுவில், “கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் 200 ரூபாய் முதல் 5000 ரூபாய்வரை அபராதம் விதிக்கும் வகையில் செப்டம்பர் 4ஆம் தேதி பொது சுகாதாரத்துறை வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.

தனிமைப்படுத்தும் விதிகளை மீறுதல், பொது இடத்தில் முகக்கவசம் அணியாதது, தனி மனித இடைவெளியை பின்பற்றாதது, பொதுவெளியில் எச்சில் துப்புதல், முடி திருத்தகம், ஸ்பா, ஜிம் ஆகியவற்றிற்கான நிலையான செயல்பாட்டு விதிகளை பின்பற்றாதது குற்றம் என்றும், அதற்காக அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர், காவல் துறை, சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை ஆளுநர் மூலமாக அறிவிக்காமல், சுகாதரத்துறை செயலாளர் அளவிலான நிர்வாக உத்தரவாகவே வெளியிடப்பட்டுள்ளதாக கருதி அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க...விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்: சமூக வலைதளத்தில் எழும் கண்டங்கள்!

ABOUT THE AUTHOR

...view details