தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டுறவு வங்கிகளுக்கு கடன் வழங்கும் அதிகாரம் கொடுத்தது ஏன்? - ட்டுறவு வங்கிகள் மாநில அரசு சம்பந்தப்பட்டது

சென்னை: நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பு ஜூலை 20ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Challenging Cooperative banks link with RBI, orders reserved
Challenging Cooperative banks link with RBI, orders reserved

By

Published : Jul 15, 2020, 2:41 AM IST

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு, அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும், தமிழ்நாட்டில் உள்ள நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி, வேலூர் கூட்டுறவு நகர்ப்புற வங்கி ஆகிய இரண்டு கூட்டுறவு வங்கிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், கூட்டுறவு வங்கிகள் மாநில அரசு சம்பந்தப்பட்டது என்பதால், அரசியல் சாசனத்தின்படி, நாடாளுமன்றத்திற்கு கூட்டுறவு வங்கிகள் தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூட்டுறவு சங்கங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இந்த அவசர சட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக மட்டுமல்லாமல், அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது என வாதிட்டார்.

ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமயாஜி, நாடு முழுவதும் 1,937 கூட்டுறவு சங்கங்கள், 7.27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு வங்கியை ஒழுங்குப்படுத்த ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாக வாதிட்டார். இந்த வாதத்தையே மத்திய அரசு தலைமை வழக்கறிஞரும் முன்வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பொதுமக்களின் நலன் பாதுகாக்கப்படவில்லை என நம்பினால், பிறகு ஏன் கூட்டுறவு சங்கங்களுக்கு வங்கி நடவடிக்கைகளுக்கான உரிமங்களை ரிசர்வ் வங்கி வழங்கியது எனக் கேள்வி எழுப்பினர்.

அவசர சட்டத்திற்கு தடை கோரிய இடைக்கால மனு மீதான உத்தரவை 20ஆம் தேதி பிறப்பிப்பதாகக் கூறி, வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details