கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் நாடெங்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நீண்ட காலமாகப் பயன்பாட்டில் உள்ள ரயில் பெட்டிகளைத் தனிமைப்படுத்துதல் வார்டுகளாக மாற்றும் பணியும் நடைபெறுகிறது. இதில் 5,000 ரயில் பெட்டிகளைத் தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்ற முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பில், 2,500 பெட்டிகளை குறுகிய கால அவகாசத்தில் வார்டுகளாக மாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரயில்கள் மற்றும் பணிமனைகள் ஏற்கனவே போதிய சுகாதாரம் இல்லாமல் இருக்கும் நிலையில், கரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக அவற்றை மாற்றக் கூடாது என வழக்கறிஞர் முத்துசாமி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், போதிய உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் இல்லாத ரயில் பெட்டிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக தனியார் மருத்துவமனைகளை வார்டுகளாக பயன்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக விசாரித்த நீதிபதி எஸ். வைத்தியநாதன், வழக்கு குறித்து ஏப்ரல் 9ஆம் தேதி மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
ரயில்பெட்டிகளை கரோனா வார்டுகளாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு! - ரயில்பெட்டிகளை கரோனா வார்டுகளாக மாற்றுவதற்கு எதிரான வழக்கு
சென்னை: ரயில் பெட்டிகளை கரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
hc