தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘பிகில்’ படத்தின் கதைக்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு! - vijai movie case

சென்னை: நாளை திரைக்கு வரவுள்ள பிகில் படத்தின் கதைக்கு உரிமை கோரி அம்ஜத் மீரான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Challenging bigil movie new petition case, பிகில் படத்தின் கதைக்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு

By

Published : Oct 24, 2019, 8:01 AM IST

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த அம்ஜத் மீரான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிகில் படத்தின் கதைக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும், தனது கதையையும் அட்லி கதையையும் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும், தன் கதையை பயன்படுத்தியதற்காக 10 லட்சம் ரூபாய் வழங்க இயக்குநர் அட்லி, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

பிரேசில் என்ற தலைப்பில் 2014 ஜூன் 12ஆம் தேதி உருவாக்கிய தலைப்பில், கால்பந்தாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து உருவாக்கியதாகவும், அதை சர்வதேச அளவிலான நட்சத்திரங்களைக் கொண்டு படமாக்கினால் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ஈட்ட முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார். சென்னை மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற பகுதிகளிலும், அயல்நாடுகளிலும் உள்ள தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லியுள்ளதாகவும், குறிப்பாக மேற்கு அமெரிக்க எழுத்தாளர் சங்கத்திலும் கதையை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பிரேசில் படத்தின் கதையாக, வறுமையில் வாழும் இளைஞர்களிடம் உள்ள கால்பந்தாட்ட திறமையை கண்டறியும் ராயப்பன் என்ற நடுத்தர வயது ரவுடி ஒருவர், இளம் வயது பயிற்சியாளருடன் சேர்ந்து அந்த இளைஞர்களை முன்னேற்றுவதும், அதற்கு இடையூறாக உள்ள கால்பந்தாட்ட பெடரேசன், அதன் கட்டமைப்பை எதிர்த்து போராடுவது, தடைகளைத் தாண்டி அந்த அணி சாதிப்பது என தனது கதைக்கு பதிப்புரிமை பெற்றுள்ளதாகவும், சான்றிதழுக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

அட்லி உருவாக்கியுள்ள பிகில் படத்தில் வெளியான ட்ரெய்லர் முதல் ராயப்பன் கதாப்பாத்திரம் வரை தனது கதையை திருடி எடுக்கப்பட்ட படத்தை வெளியிட அனுமதித்தால் தனக்கு பாதிப்பு ஏற்படும். ஹாலிவுட் படங்கள் பலவற்றை அப்படியே தமிழில் எடுக்கப்பட்டுவரும் நிலையில் பதிப்புரிமை சட்டத்தை நன்கு அறிந்துள்ள இயக்குநர் அட்லியும், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனமும் எவ்வித பயமும் இல்லாமல் இதுபோன்ற திருடப்பட்ட கதையில் படமெடுப்பது என்பது சட்டம் தங்களைத் தண்டிக்காது என்ற எண்ணத்தில்தான் என்பதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: #BigilVijay விஜய் ரசிகர்கள் செய்த காரியத்தை நீங்களே பாருங்க..!

ABOUT THE AUTHOR

...view details