அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58இல் இருந்து 59ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, ஒழுங்கு நடவடிக்கை விசாரணை நிலுவையில் உள்ளவர்களுக்கு ஓய்வு வயதை நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு எதிராக ஊழல் வழக்குகள் குறித்தும், ஒழுங்கு நடவடிக்கை விசாரணை நிலுவையில் இருந்தும், பணியில் தொடரும் அரசு ஊழியர்கள் குறித்தும் அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.