சென்னையை அடுத்த மணலி நியூ டவுன் பகுதியைச்சேர்ந்தவர், மூதாட்டி ராஜேஸ்வரி (73). இவர் கோவை செல்வதற்காக மீஞ்சூரில் இருந்து மின்சார ரயிலில் கடந்த 14ஆம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது, மின்சார ரயிலானது பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் நின்றது.
அப்போது, அந்த மின்சார ரயிலில் ஏறிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து இறங்கி தப்பியோடினார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி, பேசின் பிரிட்ஜ் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
ரயிலில் பயணித்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு அதில் ஒரு நபர் மூதாட்டியிடம் இருந்து நகையைப் பறித்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இந்த பறிப்பு சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல் துறையினர் வழிப்பறி கொள்ளையனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:அட்வைஸ் பண்ண ஆசிரியர் மண்டை உடைப்பு.. விழுப்புரம் பகீர் சம்பவம்!