தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் நகை பறிக்கும் ஆசாமிகள் : பதைபதைக்கும் சிசிடிவி காட்சி - பெண்களிடம் நகை பறிப்பு

சென்னை அண்ணாநகரில் நடந்து செல்லும் பெண்களிடம் நகைகளை பறிக்கும் கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியானது.

சென்னையில் நகை பறிக்கும் ஆசாமிகள் : பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
சென்னையில் நகை பறிக்கும் ஆசாமிகள் : பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

By

Published : Apr 1, 2022, 11:12 PM IST

சென்னை: ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (55). அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாவதி (62).
இரண்டு பேரும் அண்ணாநகர் டிபிளாக் பகுதியில் நேற்று நடந்து சென்றனர். அப்போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்க நகையைப் பறித்து கொண்டு ஓடி விட்டனர்.


அதைப்போல பிரபாவதி கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க நகையையும் பறித்துக்கொண்டு ஓடி விட்டனர். இது தொடர்பாக அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியானது. அதில் பைக்கில் வந்த கொள்ளையர்களில் ஒருவர் நடந்து சென்ற பெண்ணை கீழே தள்ளி நகையைப் பறித்துக் கொண்டு ஓடும் சிசிடிவி காட்சியும், பொதுமக்கள் கொள்ளையர்களை துரத்தும் காட்சியும் பதிவாகி உள்ளது. அந்தக் காட்சி அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது. கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ரயில் ஏசி பயணத்தில் இன்று முதல்...!

ABOUT THE AUTHOR

...view details