சென்னை சைதாப்பேட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சென்னை: சைதாப்பேட்டை கருணாநிதி தெருவை சேர்ந்தவர் பூங்கொடி(43). இவர் பெண் கூத்தாடும் பிள்ளையார் கோவில் தெரு வழியாக வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது பூங்கொடியை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். திடீரென பூங்கொடி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்கத் தாலி சங்கலி, மற்றும் இரண்டு சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு பூங்கொடியே கீழ தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதில் நிலை திடுமாறி கீழே விழுந்ததால், கழுத்து மற்றும் கை கால் பகுதிகளில் பூங்கொடிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் பதற்றத்தில் அலறி அடித்து பெண் சாலையில் விழுந்த நேரத்தில் அதே சாலையில் அதிவேகமாக வந்த ஆட்டோ ஒன்று பூங்கொடி மீது மோதாமல் நிலைதடுமாறி நின்றது. ஆட்டோ ஓட்டுனர் சாமர்த்தியமாக ஆட்டோவை நிறுத்தியதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இடிந்து விழும் நிலையில் பாலம்; மரண பீதியில் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் உப்பள தொழிலாளர்கள்
இந்நிலையில் பூங்கொடியை மீட்ட அக்கம்பக்கத்தினர் முதலுதவி வழங்கி, பின்னர் இது குறித்து சைதாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இந்த திருட்டு சம்பவம் குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மேலும் முதற் கட்ட விசாரணையாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி உள்ளனர். இதன் அடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வந்த அந்த மர்ம நபர்களைத் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
செயின் பறிக்கும் இந்த பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பைப் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள், பணிபுரியும் பெண்கள் மேலும் முதியவர்கள் ஏராளமானோர் பெண் கூத்தாடும் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர். திருட்டு மற்றும் வழிப்பறி அப்பகுதியில் பெருகி விட்டதாகவும், இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் கூட தைரியமாக வெளியில் செல்ல முடியாத அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றாவாளிகளை கட்டுபடுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை பெருநகரில் தற்போது கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றாவளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:உத்தரபிரதேசத்தில் தெருநாய்கள் தாக்கியதில் சிறுமி பலி; மற்றொரு சிறுமி மருத்துவமனையில் அனுமதி