சென்னை அமைந்தகரை கலெக்ட்ரேட் காலணியைச் சேர்ந்தவர் உஷா(35). இவர், சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், சற்றும் எதிர்பார விதமாக உஷாவின் கழுத்திலிருந்த 7 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
அன்றாடும் அரங்கேறும் வழிப்பறி ! பறிக்கப்பட்ட 7 சவரன் தங்க சங்லி! - chennai
சென்னை: சாலையில் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 7 சவரன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு சென்ற இளைஞர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுசம்பவம் குறித்து புகார் அளித்ததன் அடிப்படையில் அமைந்தகரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, அண்ணாநகர் உதவி ஆணையர் சீனிவாசலு தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்த காவல் துறையினர், அமைந்தகரை பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வழிப்பறி சம்பவத்தில் ஈடுப்பட்டது அதே பகுதியை சேர்ந்த ரகிம்(19), அஜித்(22) என்பது தெரியவந்தது.
வழிப்பறியில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் , இருவர் மீதும் ஏற்கனவே மதுரவாயல், அமைந்தகரை, கோயம்பேடு உள்ளிட்ட காவல் நிலையத்தில் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கு நிலுவையல் உள்ளது என்பதும் தெரியவந்தது. அமைந்தகரை பகுதியில் தொடர்ச்சியாக வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறிவருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.