இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு கூறியதாவது, இதுவரை 29 லட்சத்து 50 ஆயிரத்து 633 வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில், வாக்காளர்கள் விவரங்களை சரிபார்த்து உள்ளனர். சுமார் 1.65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விண்ணப்பித்து உள்ளனர். வரும் 15ஆம் தேதி வரை இந்த திருத்தங்கள் நடைபெறும். பொதுமக்கள் உடனடியாக திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதுவரை எதிர்பார்த்த அளவில் 5 சதவிகிதம் வரை மட்டுமே வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து, நாளைக்குள் ராதாபுரம் தொகுதி கடைசிச் சுற்று வாக்குப் பதிவு இயந்திரங்கள், தபால் ஓட்டு உள்ள பெட்டிகள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது என்றார்.