தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையக் குழு ஆய்வு - பராமரிப்புப் பணிகள் குறித்து கண்காணிப்பு!

பருவக்கால மாற்றங்கள் குறித்து அறிய முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய குழு ஆய்வு மேற்கொள்கிறது.

Central Team Inspects Mullai Periyar Dam
Central Team Inspects Mullai Periyar Dam

By

Published : May 15, 2023, 4:39 PM IST

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையக் குழு ஆய்வு - பராமரிப்புப் பணிகள் குறித்து கண்காணிப்பு!

கேரளா : பருவக்காலங்களில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க முல்லைப் பெரியாறு அணையில், மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையிலான துணை கண்காணிப்புக் குழு ஆய்வு மேற்கொண்டது.

கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் பருவக் காலங்களின்போது ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கவும் அணையில் ஏற்படும் பாதிப்புகளை பராமரிக்கவும், மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

இந்நிலையில், மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் தலைமையிலான மூன்று பேர் குழுவுக்கு உதவியாக, 5 போ் கொண்ட துணைக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி மத்திய நீர்வள தலைமைக் கண்காணிப்புக் குழு அணை பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

தற்போது அணையின் நீர்மட்டம் 118 அடியாக உள்ள நிலையில், மத்திய நீர்வள துணைக் கண்காணிப்புக் குழு தலைவரான நீா்வள ஆணைய செயற்பொறியாளா் சதீஷ் குமாா், தமிழக பிரதிநிதிகளான பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளா் சாம் இர்வின், உதவிச் செயற்பொறியாளா் டி. குமார் மற்றும் கேரள அரசின் பிரதிநிதிகளான கட்டப்பனை நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் ஹரிகுமார், உதவிப் பொறியாளா் பிரசீத் ஆகியோர் கொண்ட குழுவினர் அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

தமிழக அதிகாரிகள் தமிழக அரசு படகிலும், கேரள அதிகாரிகள் கேரள அரசு படகிலும் அணைப் பகுதிக்குச் சென்று அங்கு, பிரதான அணை, பேபி அணை, கேலரி பகுதி, மதகுப் பகுதி மற்றும் மழையின் அளவு, அணையின் நீா்வரத்து, நீா் வெளியேற்றம் ஆகியன குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடா்ந்து, மாலை குமுளியில் உள்ள பெரியாறு அணை கண்காணிப்புக் குழு அலுவலகத்தில், துணைக் கண்காணிப்பு குழுவினா் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தின் இடையே, அணைப் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வுகள் சம்பந்தமான அறிக்கையை மத்திய நீர்வள தலைமைக் கண்காணிப்புக் குழுவிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

அணையின் மொத்த உயரம் 152 அடி என்ற நிலையில், இதற்கு முன் அணையின் நீர் மட்டம், 127. 75 அடியாக இருந்த போது, அதாவது கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி இந்தக் குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம், 118அடியாக குறைந்து உள்ளதால், அணையில் மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து இக்குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

இதையும் படிங்க :டாஸ்மாக் கிடங்கு முன் நின்ற லாரியில் திருட்டு; பெட்டியில் ஓட்டை போட்டு கைவரிசை காட்டியது யார்?

ABOUT THE AUTHOR

...view details