தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாஜ்பாய் பிறந்தநாள்: விவசாயிகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மத்திய அமைச்சர்! - farmers scheme

சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி நடைபெறும் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்துள்ளார்.

விவசாயிகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மத்திய அமைச்சர்!
விவசாயிகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மத்திய அமைச்சர்!

By

Published : Dec 25, 2020, 8:05 AM IST

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25ஆம் தேதி ஆண்டுதோறும் நல்லாட்சி நாளாக கொண்டாடப்பட்டுவருகிறது. இதை முன்னிட்டு ஒன்பது கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இரண்டாயிரம் ரூபாய் செலுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார்.

அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாஜக முக்கியத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

சென்னை அருகே மறைமலைநகரில் நடக்கும் கலந்துரையாடலில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்கிறார். இதற்காக நேற்று இரவு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்தடைந்தார்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், " சிறந்த தொலைநோக்குவாதியும், உலகம் போற்றும் தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.

இதை முன்னிட்டு ஒன்பது கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இரண்டாயிரம் ரூபாய் செலுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். இந்த விழாவில் நான் கலந்துகொள்ள உள்ளேன்" என்றார்.

இதையும் படிங்க: விவசாயிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details