தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 28, 2020, 3:06 PM IST

ETV Bharat / state

தீவிரம் அடையும் கரோனா: மத்திய மருத்துவக் குழு ஆய்வு

சென்னை: கரோனா பாதிப்பு அதிகமுள்ள திருவிக நகர் பகுதியில் மத்திய மருத்துவக் குழுவினர் ஆய்வுமேற்கொண்டனர்.

மத்திய மருத்துவ குழு ஆய்வு
மத்திய மருத்துவ குழு ஆய்வு

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக, சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தீவிரம் அடைந்துள்ளது.

சென்னையில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று சமூக தொற்றாக மாறிவிட்டதா என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இதனைக் கண்டறிய மத்திய அரசு மருத்துவக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்த மருத்துவக் குழு கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களைக் கண்டறிந்து அங்கு கரோனா சமூக தொற்றாக மாறிவிட்டதா என ஆய்வு செய்துவருகின்றனர்.

மத்திய மருத்துவ குழு ஆய்வு!

அதன்படி தமிழ்நாட்டில் கோவை, சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அந்தக் குழு ஆய்வு மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில் சென்னையில் கரோனாவால் அதிக பாதிப்பான திருவிக நகர் பகுதியில் மத்திய மருத்துவக் குழு அலுவலர்கள் டாக்டர் யுவராஜ், நிர்மல் ஜோ ஆகிய இருவரும் ஆய்வுமேற்கொண்டு மக்களின் உடல்நிலையை கேட்டறிந்தனர்.

மக்களின் உடல்நிலையைக் கேட்டறியும் மருத்துவக் குழு

பின்னர் மாநகராட்சி சார்பில் கொடுக்கப்படும் கிருமிநாசினி, முகக்கவசம், மற்ற அத்தியாவசிய பொருள்களையும் ஆய்வுசெய்தனர். இந்த ஆய்வின்போது அருண் தம்புராஜ் ஐஏஎஸ் உடன் இருந்தார். இதேபோல் கரோனா தடுப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வளசரவாக்கம் பகுதியை ஆய்வுசெய்தார்.

இதையும் படிங்க: பாஜக செய்தித் தொடர்பாளருக்கு கரோனா?

ABOUT THE AUTHOR

...view details