அண்மையில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள பண்டிட் தீன்தயாள் தொல்லியல் கல்லூரியில் இருந்து முதுகலை தொல்லியல் பட்டயப் படிப்பு 2020-2022ஆம் ஆண்டு அமர்வில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியானது.
அதில் தொல்லியல் மொழிகளான சமஸ்கிருதம், பாலி, அரபு ஆகிய செம்மொழிகளை முதுகலைப் பட்டம் பயின்றவர்கள் இந்தப் பட்டயப்படிப்பில் சேர்வதற்கு குறைந்தபட்ச தகுதியுடையவர்களாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பில் செம்மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்துதிமுக தலைவர் ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக உயர் நீதிமன்றக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.