காவரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு திட்டம் வகுத்த கர்நாடக அரசு 2013ஆம் ஆண்டு அதனை அறிக்கையாக வெளியிட்டது. ரூ 5,912 கோடி மதிப்புள்ள இந்தத் திட்டம், பெங்களூரு, ராம் நகர் ஆகிய மாவட்டங்களின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
மேகதாது அணை கட்ட மத்திய அரசு பரிசீலனை! - தமிழ்நாடு அரசு
சென்னை: தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
ஆனால், மேகதாது அணை கட்டுவது உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிரானது என தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டது. மேலும், மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது எனவும் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி மேகதாது அணையை கட்டும் திட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தமிழ்நாடு மக்களிடையே பெரும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.