தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்காததற்கு மத்திய அரசே காரணம் - திருநாவுக்கரசர்

சென்னை: மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்காமல் போனதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறினார்.

congress mp thirunavukkarasar
congress mp thirunavukkarasar

By

Published : Oct 30, 2020, 3:50 PM IST

சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் இன்று (அக். 30) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

எய்ம்ஸ் மருத்துவமனை குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறாதது தவறு. தமிழ்நாட்டிலும் அமையவுள்ளதால் தமிழ் மொழி தெரிந்தவர்களை அக்குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும். மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்காமல் போனதற்கு மத்திய அரசுதான் காரணம்.

உச்ச நீதிமன்றம் மத்திய அரசு கூறிய பதிலின் அடிப்படையில்தான் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

சென்னையில் நேற்று (அக். 29) பெய்த மழையில் தண்ணீர் தேங்கியதற்கு, அரசு முறையான நடவடிக்கை எடுக்காததுதான் காரணம். இதன் பின்னாவது உரிய நடவடிக்கையை மாநகராட்சி எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரஜினி ட்விட்டர் பதிவுக்குப் பதில் அளித்து பேசிய திருநாவுக்கரசர், அவர் வருவேன், அல்லது வரவில்லை என்று எங்கும் குறிப்பிடவில்லை என்றும், பல வருடங்களாக காத்திருக்கும் அவரது ரசிகர்கள், இன்னும் மூன்று மாத காலம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details