சென்னைமெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் கடலில் பாலம் போன்று அமைத்து, வங்க கடலில் 360 மீட்டர் உயரத்தில் 80 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசு முதல் கட்ட அனுமதியை வழங்கி உள்ளது.
கருணாநிதியின் பேனா நினைவு சின்னம்... மத்திய அரசு அனுமதி - Central Govt approves Karunanidhi pen memorial
சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே அமைக்கப்பட உள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசு முதல் கட்ட அனுமதி வழங்கியுள்ளது.
கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி
அதேநேரம் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேனா நினைவுச்சின்னம் வைப்பதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நிதி இல்லாத போது பேனா சிலை வைக்க அவசியமா.. எடப்பாடி பழனிசாமி
Last Updated : Sep 16, 2022, 11:54 AM IST