தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லுாரி இல்லாத ஆறு மாவட்டங்களுக்கு புதிதாக மருத்துவக்கல்லூரி அமைக்க மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.
அதன்படி, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லுாரி அமைப்பதற்காக ஒப்புதல் கடிதத்தை கடந்த ஆக்டோபர் 23ஆம் தேதி மத்திய சுகாதாரத் துறை அனுப்பியது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அமையவுள்ள ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு முதற்கட்டமாக ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆறு மருத்துவக் கல்லுாரிகளுக்கு தலா 22 கோடியே 86 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திறந்தநிலைப் பல்கலைக்கழகம் நடத்திய வேலைவாய்ப்பு முகாம் - 321 நபர்களுக்கு பணி நியமனம்