தலைவர்களின் பாதுகாப்புக் கருதியும் பயங்கரவாத அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டும் குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர், முக்கிய அரசியல் தலைவர்கள் எனப் பலருக்கும் மத்திய அரசின் பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளித்து வந்தது. எஸ்பிஜி (SPG), ஒய் பிளஸ் (Y+), இசட் பிளஸ் (Z+) என பலப் பிரிவுகளின் கீழ் துணை ராணுவப் படையினர் முக்கியத் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளித்துவருகின்றனர்.
அந்த வகையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஒய் பிரிவு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பும் அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், இருவருக்கும் அளித்துவந்த மத்திய பாதுகாப்பை மத்திய உள் துறை அமைச்சகம் திரும்பப்பெற்றுக் கொண்டுள்ளது.
இதனால் இரு கட்சித் தொண்டர்களும் தலைவர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இரு தலைவர்களுக்கும் மாநில காவல் படை இனி பாதுகாப்பு அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.