தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மொழிகளே பன்முகத்தன்மையின் பண்பாட்டு அடித்தளங்கள்! - மு.க.ஸ்டாலின் - மு க ஸ்டாலின் ட்வீட்

சென்னை : மத்திய தொல்லியல் துறையின் பட்டயப் படிப்பிற்கான தகுதியில் தமிழ் மொழி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், மொழிகளே பன்முகத்தன்மையின் பண்பாட்டு அடித்தளங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Stalin on archaeology department announcement
Stalin on archaeology department announcement

By

Published : Oct 9, 2020, 2:48 PM IST

மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்புக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பை மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. அதில் கல்வித்தகுதியில் சமஸ்கிருதம், பாலி உள்ளிட்ட மொழிகள் சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால், தமிழ் அதில் இடம்பெறவில்லை.

இது குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அதேபோல தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்நிலையில் இந்தியத் தொல்லியல் துறை இன்று (அக்.09) வெளியிட்டுள்ள அறிக்கையில் பட்டயப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகள் அனைத்தையும் சேர்த்துள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்தியத் தொல்லியல் துறையின் பட்டயப்படிப்பிற்கான தகுதியில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. கடும் கண்டனத்திற்குப் பிறகு தமிழ் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனை வரவேற்கிறேன்!

மொழிகளே பன்முகத்தன்மையின் பண்பாட்டு அடித்தளங்கள்! இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை கடைப்பிடிக்க வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details