தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழகம் வானூர்தி துறையின் 'டிரோன்' கண்டுபிடிப்பிற்கு மத்திய அரசு காப்புரிமை! - chennai news

Anna University: அண்ணா பல்கலைக்கழகத்தின் வானூர்தி துறை இயக்குனர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர், 2018ஆம் ஆண்டு கண்டுபிடித்த கோபுர கண்காணிப்பு ட்ரோன்களுக்கு மத்திய அரசு காப்புரிமை அளித்திருக்கிறது.

Central government Patented invention of Drone by Department of Aeronautics in Chennai Anna University
அண்ணா பல்கலைக்கழகம் வானூர்தி துறையின் ட்ரோன் கண்டுபிடிப்பிற்கு மத்திய அரசு காப்புரிமை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 8:27 AM IST

அண்ணா பல்கலைக்கழகம் வானூர்தி துறையின் டிரோன் கண்டுபிடிப்பிற்கு மத்திய அரசு காப்புரிமை

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் குரோம்பேட்டையில் இயங்கக்கூடிய மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் (Madras College of Technology) வானூர்தி பொறியியல் துறை இயங்கி வருகிறது. இந்த துறையின் இயக்குனர் பேராசிரியர் செந்தில் குமார் தலைமையிலான குழுவினர் 2018ஆம் ஆண்டு கோபுர கண்காணிப்பு ட்ரோன்களை வடிவமைத்தது.

இந்த வகை ட்ரோன்களை அவசரகால பேரிடர் பகுதிகளிலும், மருந்துகளைக் கொண்டு செல்வதிலும், 24 மணி நேரமும் தொடர்ச்சியாக பறக்கும் சக்தியும் கொண்டதாகும். மேலும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் கண்காணிப்புகளை மேற்கொள்வது, எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பகுதியை மேற்கொள்வது, அன்னியர்கள் ஊடுருவலை கண்காணித்து சொல்வது என பல்வேறு முக்கிய பயன்பாடுகளுக்கு இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி கண்டுபிடித்த ட்ரோன்களை எல்லை பாதுகாப்பு பாதுகாப்பில் பயன்படுத்தவும் பாதுகாப்பு துறை வாங்கி உள்ளது. ட்ரோன்களை உற்பத்தி செய்வதற்கும் அதன் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசு ட்ரோன் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளது.

ட்ரோன்களை பயன்படுத்தி விவசாய நிலங்களுக்கு மருந்து தெளித்தல் உள்ளிட்ட விவசாயப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. பேரிடரில் சிக்கி உள்ளவர்களை கண்டறிந்து மீட்பதற்கானப் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இந்த வகை ட்ரோன்களை கண்டுபிடித்த பேராசிரியர் செந்தில் குமார், தாமரைச்செல்வி தலைமையிலான குழுவினருக்கு மத்திய அரசு நேற்று (ஜன.4) காப்புரிமை அளித்திருக்கிறது. டிசம்பர் 30ஆம் தேதி 2023 இதற்கான சான்றிதழ்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு அளித்திருக்கிறது.

இதையும் படிங்க: சட்டவிரோத மணல் விற்பனை வழக்கு; தனியார் பங்குதாரர்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details