சென்னை: தலைமைச் செயலாளர், கடிதத்தின் வாயிலாக ஐஏஎஸ் அலுவலர்கள் அனைவரும் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பம் மற்றும் பிற நபர்கள் பேரில் உள்ள அசையா சொத்துக்களின் விவரங்களை ஒன்றிய அரசின் உத்தரவின்படி, வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள்ளாக ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
ஐஏஎஸ் அலுவலர்கள், சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர் உத்தரவு - சொத்துக்களை கணக்கு காட்ட சொல்லி உத்தரவு
பணியில் உள்ள ஐஏஎஸ் அலுவலர்கள் அனைவரும் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை செயலாளர் கடிதத்தின் வாயிலாக உத்தரவிட்டுள்ளார்.
ஐஏஎஸ் அலுவலர்கள், சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் - தலைமைச் செயலாளர் உத்தரவு
சரியான காரணம் இன்றி சொத்து விவரங்களை தெரிவிக்காமல் இருக்கும் ஐஏஎஸ் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:முதன்முறையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் பேருந்து சேவை!