தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜி 20 ஆலோசனைக் கூட்டம்; ஈபிஎஸ்-க்கு அழைப்பு - கொடுக்கப்பட்டதா புது அங்கீகாரம்

நாளை நடைபெற உள்ள ஜி 20 மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

G20 summit  Edappadi Palaniswami  central government  consultation meeting on the G20 summit  consultation meeting  ஆலோசனைக் கூட்டம்  ஜி 20 மாநாடு  ஜி 20 மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்  ஈபிஎஸ்க்கு அழைப்பு  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  மத்திய அரசு அழைப்பு  மத்திய அரசு  எதிர்க்கட்சி தலைவர்
ஈபிஎஸ்

By

Published : Dec 4, 2022, 8:28 PM IST

சென்னை:இந்தியாவில் 2023ஆம் ஆண்டு ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு இந்தியா முதல் முறையாக தலைமை வகிக்கிறது. இந்த மாநாடு நடத்துவது தொடர்பாக மத்திய அரசு டெல்லியில் நாளை (டிசம்பர் 5) ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளது.

2022 டிசம்பர் 1ஆம் தேதி முதல் 2023 நவம்பர் 30ஆம் தேதி வரை ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று உள்ளது. இந்த காலகட்டத்தில் மத்திய அரசு 32 பிரிவுகளில் நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளது. எல்லா மாநிலங்களிலும் இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஈபிஎஸ்-க்கு அழைப்பு

குடியரசுத்தலைவர் மாளிகையில் நாளை மாலை 5.30 மணிக்கு இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மேலும் அழைப்பிதழில் எடப்பாடி பழனிசாமியை, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என சுட்டிக்காட்டி குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பயன்பாட்டுக்கு வந்தது அதிநவீன கார் பார்க்கிங்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details