சென்னை:CEIR (central equipment identity register) மத்திய சாதன அடையாள பதிவின் மூலமாக , செல்போனை தொலைத்தவர்கள் மற்றும் காவல் துறையினர் ஆகிய இருவரும் ஐஎம்இஐ நம்பரை பயன்படுத்தி செல்போனை 24 மணி நேரத்தில் முடக்க முடியும். அவ்வாறு முடக்கப்பட்ட செல்போனில் புதிய செல்போன் எண்ணை பதிவு செய்யும் பொழுது சம்பந்தப்பட்ட, செல்போன் தொலைத்தவர் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு குறுஞ்செய்தி செல்லும்.
அதே குறுஞ்செய்தி செல்போன் தொலைத்தவர்களுக்கும் தொலைத்தவர்கள் புகார் அளித்த காவல் நிலையத்திற்கும் செல்லும். இந்த இணையதளத்தின் மூலம் நீங்கள் செல்போன் வாங்குவதற்கு முன்பாக எவ்வளவு பழமையான செல்போன் என்பது குறித்து ஐஎம்இஐ நம்பர் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.மேலும் உங்கள் பெயரில் எத்தனை செல்போன் சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபி சஞ்சய் குமார் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சைபர் கிரைம் பிரிவு காவல் துறையினருக்குத் தொலைதொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து, இந்த இணையதளத்தில் பயன்படுத்துவதற்கான லாக் இன் ஐடிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.