தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலத்திற்கு சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல்! - ஈரடுக்கு உயர்மட்ட பாலம்

மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலம் அமைக்க நிபந்தனைகளுடன் மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட பாலம் அமைக்க ஒப்புதல்
மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட பாலம் அமைக்க ஒப்புதல்

By

Published : Feb 2, 2023, 1:36 PM IST

மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட பாலம் அமைக்க ஒப்புதல்

சென்னை:மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையிலான ரூ.5800 கோடியில் பறக்கும் சாலை திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு தற்போது அனுமதி அளித்துள்ளது. மேலும், உயர்மட்ட பாலத்திற்காக எழுப்பப்படும் பில்லர்களால் மழை மற்றும் சாதாரண காலங்களில் நீரோட்டத்திற்குத் தடை ஏற்படக் கூடாது எனவும் பாலம் அமைக்கத் தற்காலிகமாக அமைக்கப்படும் கட்டமைப்புகள் பணிகள் முடிந்த ஒரு மாதத்திற்குள் அகற்றப்பட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், கட்டுமானத்தின் போது அகற்றப்படும் கழிவுகளை நீர் நிலையிலோ அல்லது அதற்கு அருகிலோ கொட்டக் கூடாது எனவும் நிபந்தனை விதித்து திட்டத்திற்கு அனுமதி வழங்கி மத்திய அரசுக்கு சுற்றுசூழல் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை வழியாக இப்பாலம் துறைமுகத்தைச் சென்றடைய உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, 1,815 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் தொடங்கப்பட்டது. அடுத்த வந்த அதிமுக ஆட்சியால் திட்டம் தடை செய்யப்பட்ட நிலையில், கூடுதல் நிதி மற்றும் செயல் திட்டங்களின் மூலம் மறுபடியும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மீண்டும் திட்டம் செயல்பாட்டிற்கு வருகிறது. சுற்றுச்சூழல் நிபுணர் குழுவின் நிபந்தனைகளுடன் விரைவில் பணியைத் தொடங்கி அடுத்த 30 மாதங்களுக்குள் பணியை முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: Hosur violence: எருதுவிடும் விழாவுக்கு அனுமதி கேட்டு போராட்டம்.. ஓசூர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் சூறையாடல்!

ABOUT THE AUTHOR

...view details