சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப அந்தந்த நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம்செய்கின்றன. ஆனால், இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை மாதத்தில் இரண்டு முறை நிர்ணயிக்கப்பட்டுவந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது எண்ணெய் நிறுவனங்களே தினசரியாக நிர்ணயித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனால், பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து தற்போது அவை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், கடந்த மாதத்தில் மட்டும் பலமுறை விலை உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை நேற்று இரவோடு இரவாக 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க இதுவரை சிலிண்டருக்கு அளிக்கப்பட்டுவந்த மானியங்களும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.