சென்னை:தமிழ்நாட்டில் 20 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் மூலம் தேங்காய் பருப்பு (கொப்பரை தேங்காய்) பரிவர்த்தனை செய்யப்பட்டுவருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம், ஈரோடு மாவட்டத்திலுள்ள பூதப்பாடி, அந்தியூர், அவல்பூந்துறை, கோபிசெட்டிபாளையம், கொடுமுடி, சத்தியமங்கலம், எழுமாத்தூர், வெப்பிலி, நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம், பரமத்திவேலூர், திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை, பெதப்பம்பட்டி, காங்கேயம், வெள்ளகோயில், மூலனூர், முத்தூர், மதுரை மாவட்டத்திலுள்ள த.வாடிப்பட்டி ஆகிய 20 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தேங்காய் பருப்பு பரிவர்த்தனை செய்யப்பட்டுவருகிறது.
மேலும், ஆனைமலை, ஒட்டன்சத்திரம், அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், உசிலம்பட்டி, பரமத்திவேலூர், தேனி, பெதப்பம்பட்டி, உடுமலைப்பேட்டை, வெள்ளகோயில், குடியாத்தம், ராஜபாளையம் ஆகிய 13 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இ-நாம் திட்டத்தின் மூலம் மின்னணு பரிவர்த்தனை செய்யப்பட்டுவருகிறது.
இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தேங்காய் பருப்பை காயவைப்பதற்கான உலர்கள வசதியும், தேங்காயை தேங்காய் பருப்பாக மாற்றுவதற்கு உலர்த்தும் எந்திர வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.