டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா, பிகார், புதுச்சேரி, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு கூடுதல் நிவாரண தொகையாக 3,113.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நிவர் மற்றும் புரவி புயல் பாதிப்புகளை மத்திய குழு பார்வையிட்ட பின்னர், பாதிப்படைந்த விவசாய நிலங்கள் குறித்த ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்திருந்தனர். தமிழ்நாட்டில் நிவர் மற்றும் புரவி புயல் பாதிப்புகளுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 286.91 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.